திருநெல்வேலி: சிவகாசி, சித்தராஜபுரத்தை சேர்ந்த தங்கமுத்து என்பவரின் மனைவி சுப்புத்தாய் 76. இவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிவகாசியிலிருந்து வழிதவறி திருநெல்வேலிக்கு வந்துள்ளார்.
இவர் 27.12.2021 அன்று இரவு ஏர்வாடியிலிருந்து நாங்குநேரி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர் திரு.முருகன் சுப்புதாயிடம் விசாரணை செய்தார்.
அப்போது சுப்புதாய் அவரது ஊர் சிவகாசி என்று மட்டுமே கூறினார் வேறு ஏதும் அவறால் கூற முடியவில்லை. பின்னர் மேற்படி சுப்புதாயை தலைமை காவலர் திரு.முருகன் ஏர்வாடி காவல் நிலையம் அழைத்து சென்று பின் சிவகாசி காவல் நிலையத்தில் தகவல் கூறியதன் பேரில் அவரது மகன் சேகர் 44. அவர்கள் இரவு ஏர்வாடி காவல் நிலையம் வந்து அவரது தாய் சுப்புதாயை அழைத்து சென்றார்.
இதை அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப அவர்கள் ஏர்வாடி காவல் நிலைய தலைமை காவலர் திரு. முருகன் அவர்களை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.