திண்டுக்கல் : வேடசந்தூர் ஆத்துமேட்டில், ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே (45) வயது பெண் ஒருவர் தனது (15) வயது மகனுடன் நடந்து வந்து கொண்டிருந்தபோது வேடசந்தூர் சாலை தெருவை சேர்ந்த ராஜா முகமது (33), ரசீத் அகமது (26), யாசர் அராபத் (23) ஆகிய 3 பேரும் அந்த பெண்ணை வழிமறித்து ரகளை செய்து அந்த பெண்ணை 3 பேரும் தாக்கினர். அதேபோல் அப்பெண்ணின் மகனையும் தாக்கி காயப்படுத்தினர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா