திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிதர்ஷன் (எ) மது (27). மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஆகாஷ்(21). நத்தம் பகுதியை சேர்ந்த அபிமன்யு (23). என்பவர்களை நத்தம் காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப்., இ.கா.ப., அவரது அறிவுறுத்தலின்படி நத்தம் சரக காவல் நிலைய ஆய்வாளர்.தங்கமுனியசாமி, நீதிமன்ற முதல் நிலை காவலர்.கவிதா அவர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர் திரு.குமரேசன் அவர்களின் சீரிய முயற்சியால் (23.10.2024)-ம் தேதி திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மேற்கண்ட குற்றவாளிகள் 3 நபர்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா