திருநெல்வேலி : திருநெல்வேலி சீவலப்பேரி அருகே பதினாலாம்பேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வடமாநில தொழிலாளிகள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று அந்நிறுவனத்தில் வேலை செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் உணவுப் பொருள்கள் வாங்குவதற்காக ஆலடிப்பட்டி அருகே நடந்து சென்றபோது அங்கு பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவா்களை வழிமறித்து தாக்கி கைப்பேசி மற்றும் ரூ.2,000 பறித்துச் சென்றனர்.
இது தொடர்பாக அந்நிறுவன மேலாளர் அளித்த புகாரின் பேரில், சீவலப்பேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மருதூர், கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் செல்வராஜ்(29). மாடசாமி மகன் ரமேஷ்(23). ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















