திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவர் முருகன் (58). இவா், தாழைகுளம் சந்திப்பு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மேலப்பாளையம், ஆமின்புரத்தை சேர்ந்த முகமது அலி (19). தமீம் அன்சாரி (20). ஆகியோர் முருகனை வழிமறித்து கைப்பேசியை பறித்துக்கொண்டு மிரட்டல் விடுத்துச் சென்றனர்.
இது குறித்து மூன்றடைப்பு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் நான்குனேரி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர், ராஜகுமாரி வழக்குப்பதிந்து, முகமது அலி, தமீம் அன்சாரி ஆகிய இருவரையும் (20.03.2025) அன்று கைது செய்தார். மேலும், அவா்களிடமிருந்து கைப்பேசியை மீட்டதுடன், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்