காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் , காஞ்சிபுரம் உட்கோட்டம் , உத்திரமேரூர் மற்றும் பெருநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கன்னகளவு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திரு.M. சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில் உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் திரு.வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
இன்று (17.07.21 ) காரணிமண்டபம் அருகே சந்தேகத்திடமாக சுற்றித்திரிந்த புஷ்பராஜ் (26 ) தபெ.சேகர் ராமதாஸ் நகர், லாந்தர் காலனி. கலியாம்பூண்டி என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஒழுகரை கிராமத்தைச் சேர்ந்த கலா, மானாமதியைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் வீட்டில் கன்னக்களவு மற்றும் கலியாம்பூண்டியைச் சேர்ந்த தனபஞ்சாட்சரம் என்பவரிடம் வழிப்பறி ஆகிய குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.
மேற்படி வழக்குகளில் திருடப்பட்ட கமார் 3.50,000- மதிப்புள்ள 72 கிராம் தங்கநகைகள் அவரிடமிருந்து மீட்கப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.திருM.சுதாகர் . அவர்கள் கைது செய்து களவு பொருட்களை மீட்ட தனிப்படையினரை வெகுவாக பாராட்டினார்.