திருச்சி: கத்தியை காண்பித்து வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைதுதிருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப.,அவர்கள் திருச்சிமாநகரத்தில்சட்டம்ஒழுங்கைபாதுகாக்கவும்,குற்றச்சம்பவங்கள்ஏதும்நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்புநடவடிக்கைமேற்கொள்ளவும்,தீவிரவாகனதணிக்கைசெய்துகுற்றவாளிகள்மீதுசட்டரீதியானநடவடிக்கை காவல் அதிகாரிகள்மற்றும்ஆளிநர்களுக்குஅறிவுரைகள்வழங்கியுள்ளார்.
கடந்த 08.02.2022-ம்தேதி பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழபுதூரில் டீ கடை காசாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.200/- பறித்து சென்றது தொடர்பான கொடுத்த புகாரின்பேரில் பாலக்கரை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும், எதிரி விஜய்பாபு என்பவரை கைது செய்தும், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் விசாரணையில் மேற்படி வழக்கின் எதிரி விஜய்பாபு மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.
எனவே, மேற்படி எதிரி விஜய்பாபு தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட பாலக்கரை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டடார்.
மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.