கரூர் : கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மா திட்டசாலையில் (24.05.2024) ஆம் தேதி அதிகாலை 05.00 மணிக்கு காலை கடனை கழிக்க சென்ற முதியவரை அடித்து அவரிடமிருந்து அவரது இருசக்கர வாகனத்தை பிடுங்கிச்சென்றும், பின்னர் அதே வாகனத்தை பயன்படுத்தி கரூர் கோதை நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு தப்பித்துச்சென்ற நபர்களை பிடிக்க போலீசார் வாகன சோதனை செய்து தீவிரமாக தேடி வந்தபொழுது போலீசாரை கண்டவுடன் போலீசாரிடமிருந்து பிடிபடாமல் இருக்க வாகனத்தை வேகமாக எதிர் திசையில் வேகமாக திருப்பிச் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வந்த வெங்கமேட்டை சேர்ந்த 1) பரணிபாண்டி மற்றும் 2) மோத்தீஸ் ஆகியோர்களிடம் விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த பொருட்களை மீட்பதற்காக அழைத்துச் சென்ற பொழுது போலீசாரிடமிருந்து தப்பி செல்ல முயற்சித்து அருகில் இருந்த பாலத்திலிருந்து கீழே குதித்தபோது அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு எற்பட்டது. பின்னர் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த பொருட்கள் மீட்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்