மதுரை: மதுரை மாவட்டம் புறநகர் பகுதியான நாகமலைபுதுக்கோட்டை, செக்கானூரணி, சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் பகல், இரவு என நேரங்கள் பாராது ஆள் நடமாட்டம் இல்லாத நெடுஞ்சாலைகளில் டூவிலர்களில் செல்பவர்களை குறிவைத்து கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து செல்வதாக மதுரை நாகமலைபுதுக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.
வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, இரு டூவிலர்களில் வந்த 4 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் டூவிலரை நிறுத்தாமல் சென்றனர். அவர்களை., தனிப்படை போலீசார் சினிமா பாணியில் துரத்தி மடக்கிபிடித்தனர்.
இதில் 4 வாலிபர்களும் நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன், வீரமணி, பரதன், நாகராஜ், என்பதும் இவர்கள் அனைவரும் அப்பகுதியில் டூவிலர்களில் செல்பவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுவரும் கும்பல் என போலீசாரின் விசாரணையில், தெரியவந்தது.
பிடிபட்ட 4 வாலிபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.