திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 1).சிவகணேஷ் (21). 2).சையத் இப்ராஹிம் (26). 3).ரேணுகா (29). 4).மணி (21). 5).தனபாலன் (20). 6).வினோத் பாண்டியன் (23). 7).ரதின் (20). சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 8).வினோத் (19). தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 9).இசக்கிமுத்து (31). ஆகிய 9 நபர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா