திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை, பகுதியை சேர்ந்த சரத்குமார் மணி (33). இவா், கடந்த 21-ஆம் தேதி பாளை. மாா்க்கெட் தெப்பக்குளம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்ம நபர்கள் அவரை தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து, பாளையங்கோட்டையைச் சேர்ந்த இசக்கிராஜா, மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்தனர். இதே போல, கடந்த 24-ஆம் தேதி சமாதானபுரத்தைச் சேர்ந்த முருகானந்தன் என்பவரை வழிமறித்து மிரட்டி மர்ம நபர்கள் பைக்கை பறித்துச் சென்றது. அதே தினத்தில் கே.டி.சி. நகர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்த ஒருவரிடம் மர்ம நபர்கள் கைப்பேசியை பறித்துச் சென்றது.
25-ஆம் தேதி பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகரைச் சேர்ந்த சூரஜ்(21). என்பவர் அண்ணாநகர் கீழத்தெருவில் நின்றபோது, மர்ம நபர்கள் அவரைத் தாக்கி கைப்பேசி , ரூ.3 ஆயிரத்தைப் பறித்துச் சென்றது ஆகியவை குறித்து முறையே திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பெருமாள்புரம், பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்ததில் இந்த 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது பாளையங்கோட்டையைச் சேர்ந்த லிங்கதுரை, அருகன்குளம் கந்தசாமி, தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஜாபர் சாதிக் ஆகியோர் எனத் தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்