தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தானூர் பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் 29. பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது அம்பேத்கார் நகர் அதே பகுதியைச் சார்ந்த மூன்று இளைஞர்கள் வழிமறித்து பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் மற்றும் 500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டதாக பிரவீன் அளித்த புகாரின் அடிப்படையில் அரூர் காவல் நிலைய போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.