திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தி மற்றும் அருவாளை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 1.பரத், 2.முகில்குமார், 3.மணிகண்டன், 4.ரபீக் 5.ஜெய்சங்கர் மற்றும் சோமரசம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 318 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த ஆனந்தராமன் ஆகியோர் மீது சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த நிலையில், மேற்கண்ட 6 நபர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின்பேரில் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களால் (03.07.2025) ஆணை பிறப்பிக்கப்பட்டது.