திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (54). இவர், (08.03.26) அன்று அதிகாலை பாளையங்கோட்டை கொக்கிரகுளம் பகுதியில் சென்ற போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் இவரை வழிமறித்து 4 கிராம் தங்க மோதிரம், கைப்பேசி, மற்றும் ரூ.6,000 பணம் உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றனர். இது குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலி நகரம் பகுதியைச் சேர்ந்த முகமது அனாஸ் (25). மகிழ்வண்ணநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (26). மற்றும் பாட்டப்பத்து பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (27). ஆகியோரை கைது செய்து வழிப்பறி செய்யப்பட்ட பொருள்களை மீட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















