கடந்த 2015-ம் வருடம் கல்லிடைகுறிச்சியை சேர்ந்த பத்மினி 69. என்பவர் கல்லிடைக்குறிச்சி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த நபர்கள் 4.5 பவுண் தங்க செயினை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பத்மினி கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கோபாலசமுத்திரம், கொத்தங்குளத்தைச் சேர்ந்த பாண்டி என்ற பாண்டியன் 25. பேட்டையைச் சேர்ந்த திருமணி செல்வன் 29. மற்றும் முருகேசன் என்ற முருகேஷ் 28. ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று 10.11.2022-ம் தேதி வழக்கை விசாரித்த நீதிபதி திரு.பல்கலை செல்வன், அவர்கள் குற்றவாளி பாண்டிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.4 ஆயிரம் அபராதமும், திருமணி செல்வத்திற்கு 69 நாட்கள் சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று கொடுத்த கல்லிடைக்குறிச்சி காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.