திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து நிலக்கரி, சாம்பல் கழிவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றி கொண்டு கனரக வாகனங்கள் சென்னை வெளிவட்ட சாலை வழியே சென்று வருகின்றன. அவற்றில் சில லாரிகள் சீமாவரம் சுங்கச்சாவடி அருகே நிறுத்தி வைத்து ஓய்வெடுத்து செல்வது வாடிக்கை. கடந்த 20ம் தேதி உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிரிஜேஷ் யாதவ் என்ற லாரி ஓட்டுனர் தமது லாரியுடன் சீமாவரம் சுங்கச்சாவடி அருகே இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தான் போலீஸ் எனக் கூறி இறங்க வற்புறுத்தியுள்ளார்.
லாரி டிரைவர் இறங்கியதும் அவரை மிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பிடுங்கி அவர் வைத்திருந்த 600 ரூபாய் பணம் மற்றும் ஜிபேயில் 2000 ரூபாயையும் தனது கணக்கிற்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இது குறித்து லாரி ஓட்டுனர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சாலையில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து லாரி ஓட்டுனரிடம் போலீஸ் எனக்கூறி வழிப்பறியில் ஈடுபட்ட மீஞ்சூரை சேர்ந்த மூர்த்தி (38). என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு