குமரி: கோதை கிராமம் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 2 பேர் இவரை வழி மறித்து , அரிவாளை காட்டி பணம் தருமாறு கேட்டுள்ளனர் .அமலன் தன்னிடம் பணம் இல்லை என்றதும் வலது கையில் அரிவாளால் வெட்டி விட்டு , சட்டை பையில் இருந்த ரூ .10 ஆயிரம் மற்றும் செல் போனை பறித்து விட்டு தப்பினர் .
இந்த சம்பவம் குறித்து அமலன் , கோட் டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் , தேரூர் தேவக்குளம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி மகன் கமலேஷ் பைக்கில் சென்று கொண்டிருந்த போது.
தேரூர் குளம் அருகே பைக்கில் வந்த 2 பேர் வழி மறித்து அரிவாளால் மிரட்டி கமலேஷ் ஓட்டி வந்த பைக் மற்றும் அவரிடம் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பினர் .
இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . இந்த இரு சம் பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தர வின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது .
இவர் கள் நடத்திய விசாரணை யில் நாகர்கோவில் அருகே உள்ள ஆணை பொத்தை பகுதியை சேர்ந்த சுபாஷ் , அவரது நண்பர் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஜாய்ஸ் ஆகியோர் சேர்ந்து தான் வழிப்பறியில் ஈடுபட் டது தெரிய வந்தது .
இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளன . இவர் களை போலீசார் தேடி வந்தனர் . இந்த நிலை யில் நேற்று இரவு கோட்டார் அருகே போலீசார் வாகன சோதனையில் இருந்த போது பைக்கில் வந்த 2 பேரிடம் விசாரித்தனர் .
அவர்கள் முன் னுக்கு பின் பேசியதை தொடர்ந்து காவல் நிலை யம் கொண்டு சென்று விசாரித்ததில் , இவர்கள் வழிப்பறி சம்பவத்தில் தேடப்படும் சுபாஷ் , ஜாய்ஸ் என்பது தெரிய வந்தது . இதையடுத்து விசாரணையை தீவிரப்ப டுத்திய போலீசார் , இவர் ள் பறித்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.