திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தனியார் எரியூட்டு நிறுவனத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, ஏா்வாடி, கீழக்கரை, சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட சிங்கம்புணரி, தேவகோட்டை, மானாமதுரை உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 120 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் 951 கிலோ கஞ்சா மூட்டைகள் நீதிமன்ற விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு, பின்னர் எரியூட்டி அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 5 கோடி ஆகும். அப்போது ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர். கடந்த 6 மாதத்தில் மட்டும், சுமார் ரூ. 35 கோடி மதிப்பிலான 7,000 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















