திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறையினரால் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 282 கிலோ 884 கிராம் கஞ்சாவை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர், பா. மூர்த்தி., இ.கா.ப., தலைமையில், திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., மற்றும் மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர்கள், தடயவியல் நிபுணர், மினிதா (பொறுப்பு) ஆகியோரின் முன்னிலையில் திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பாப்பாங்குளம் கிராமம் பொத்தையடியில் உள்ள ASEPTIC SYSTEMS BIO MEDICAL WASTE MANAGEMENT COMPANY என்ற தனியார் நிறுவனத்தில் வைத்து எரியூட்டி அழிக்கப்பட்டன.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்