திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் பாலமுருகன் என்பவரை நடுரோட்டில் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதை கண்டித்து பொன்னேரியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பாக வழக்கறிஞர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னேரி வழக்கறிஞர் சங்கத்தில் முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் பாலமுருகனை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு