தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அரசு வழக்கறிஞர்களுடன் நீதிமன்ற பணிகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்வு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் நீதிமன்றத்தில் வழக்கின் நிலுவை குறித்தும், வழக்கின் விசாரணையை விரைந்து முடிப்பது குறித்தும், வழக்கின் தீர்ப்புகளை அதிகரிப்பது குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் தூத்துக்குடி தலைமையிடத்து தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், தூத்துக்குடி அரசு வழக்கறிஞர்கள் திரு. மோகன்தாஸ் சாமுவேல், திரு. சேவியர் ஞானப்பிரகாசம், திரு. பூங்குமார், திருமதி. மாலாதேவி, திருமதி. எல்லம்மாள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் திரு. ராஜேஷ் கண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.
















