காட்டாங்குளத்தூர் அடுத்த பொத்தேரியில் அமைந்து உள்ள எஸ் .ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் சாதனைகளைப் போற்றும் கல்லூரி தின விழா 2026 எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, 2026ஆம் ஆண்டின் கல்லூரி தின விழா புகழ்பெற்ற முனைவர் தி. பொ. கணேசன் அரங்கில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, கல்விச்சார் சிறப்புகளையும் நிறுவனத்தின் சாதனைகளையும் கொண்டாடும் வண்ணம் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
இவ்விழாவில், முனைவர் ரவி பச்சமுத்து, எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர், ஆர். பத்மப்ரியா, எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர், ஆர். ஹரிணி, நிருவாகத் தலைவர், எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். மேலும் முனைவர் ஆர். வெங்கடேஷ் பாபு, கல்விச்சார் இயக்குநர், முனைவர் பி. சிதம்பரராஜன், இயக்குநர் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை மகிழ்வித்தனர்.
முனைவர் எம்.முருகன், முதல்வர், எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, அவர்கள் வருடாந்திர அறிக்கையை வழங்கி, கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, இணைநிகழ்ச்சிகள் மற்றும் பிற கூடுதல் செயல்பாடுகளில் கல்லூரி அடைந்த சாதனைகளை விளக்கினார்.
முனைவர் எஸ். விசாலாட்சி, துணை முதல்வர், எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, அவர்கள், நிகழ்வில் கலந்து கொண்ட பெருமக்களையும் சிறப்பு விருந்தினர்களையும் வரவேற்று விழாவைத் தொடங்கிவைத்தார்.
மற்றும் முக்கிய விருந்தினர்களாக, முனைவர் பி. சம்பத், வணிகப்பிரிவுத் தலைவர், ஈபிசி டர்ன்கீ சொலியூஷன்ஸ் மற்றும் ஆர். விஜயன், மூத்த மனிதவள இயக்குநர், ப்ரோடுஆப்ட் நிறுவனம், அவர்கள், பங்கேற்றார்கள். இதில் சிறப்பு விருந்தினர் முனைவர் பி. சம்பத் அவர்கள், மாணவர்கள் தங்கள்முன்மாதிரிகளைப் பின்பற்றி, இன்றையதொழில்துறை தேவைகளுக்கேற்ப தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதாக உறுதியளித்து, இலக்கில் கவனம் செலுத்தி முன்னேறு மாறு மாணவர்களை அறிவுறுத்தினார். மற்றும் சிறப்பு விருந்தினர் ஆர். விஜயன் அவர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி எதிர்கால பொறியாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்றும் தங்களின் தனித்துவமான அறிவும் திறன்களும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்; அவையே வெற்றிக்கான திறவுகோல் என வலியுறுத்தினார்.
இந்த விழாவில் கல்வி மற்றும் துறை சார்ந்த சாதனைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதேபோல் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறைகளில் சிறப்பாக பங்களித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பாரம்பரிய நடனம், எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி, சிலம்பம் மற்றும் மாணவர்களின் உற்சாகமான நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியை, முனைவர் டி. இளங்கோ, துறைத்தலைவர், கட்டடப்பொறியியல், எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி அவர்கள் ஒருங்கிணைத்தார். இதில் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















