திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் யூனியன் அலுவலகம் முன்பு கடந்த (26.08.2025) அன்று, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் சார்பில், உரிய அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைத்திருந்தனர். தகவல் அறிந்து மானூர் காவல்துறையினர், சட்டவிரோதமாக அனுமதியின்றி பேனர் வைத்த பிஜேபி மானூர் ஒன்றிய பொதுச் செயலாளர் பிரேம்குமாரை கைது செய்து பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர். இச்சம்பவத்தையடுத்து மானூர் காவல் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினரின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, பிரேம்குமார் ஏற்பாட்டில், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி (17.12.2025) அன்று மானூர் யூனியன் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளத்தில் தவறான செய்தி பரப்பி வருகின்றனர். காவல்துறையினரின் சட்டபூர்வமான நடவடிக்கையை தவறான உள்நோக்கம் கொண்டு அதனை திசை திருப்பி, காவல்துறை மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக, மானூர் யூனியன் அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் போன்ற அறிவிப்புகளை அவர்களாகவே பரப்பி வருவது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூடிய செயலாகும் என மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















