விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வர்த்தகர் சங்கம் சார்பாக, சமத்துவ பொங்கல் விழா மற்றும் மற்றும் சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. வர்த்தக சங்கத் தலைவர் சந்திர சேகர் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நாகராஜன், காரியாபட்டி சங்க செயலாளர் அம்சத் இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், காரியாபட்டி காவல் துறை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சங்க கல்வெட்டை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். சப்.இன்ஸ் பெக்டர் பா. அசோக் குமார் சங்க கொடி ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், சங்க துணைத் தலைவர் அழகர்,
துணைப் பொருளாளர் கோவிந்த ராஜன், நிர்வாகிகள் நாகேந்திரன் விஜயராஜன். மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி