தூத்துக்குடி: ஆயுதப்படை காவல்துறையினருக்கான வருடாந்திர நினைவூட்டும் கவாத்து பயிற்சி (Mobilization Parade) இன்று (07.01.2025) முதல் வருகின்ற (26.01.2025) வரை நடைபெற உள்ளது. மேற்படி ஆயுதப்படையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆயுதப்படை காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம், தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C.மதன் இ.கா.ப, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. சுனைமுருகன் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.