திருவண்ணாமலை : (07.12.2023) வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S. முத்துசாமி, இ.கா.ப., அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட விரல் ரேகை பிரிவு, மாவட்ட குற்றப் பிரிவுகள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, துப்பறியும் மோப்ப நாய் படை பிரிவு மற்றும் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் ஆகிய பிரிவுகளை வருடாந்திர ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் உடன் இருந்தார்.