திருநெல்வேலி: மாவடியை சேர்ந்த முத்துகுட்டி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபா 34, என்பவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 2009ம் வருடம் முத்துக்குட்டியின் உறவினர்கள் பிரபாவிடம் முத்துகுட்டிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க போவதாகவும் மேலும் திருமணம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் வரதட்சனை அதிகம் தரவேண்டும் என கூறி பிரபாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி கொடுமை படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பிரபா நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் முத்துக்குட்டி உட்பட அவரது உறவினர்கள் 7 பேர் மீது வரதட்சணை தடுப்புச் சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து முத்துகுட்டியை சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு வள்ளியூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று 22.12.2021 மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி திரு.பிரகாஷ், அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட முத்துக்குட்டிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிக்கு சிறை தண்டனை பெற்று கொடுத்த நாங்குநேரி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன்,இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.