தேனி: கடந்த சில மாதங்களாக இந்த வயலில் அகத்தி செடி மற்றும் பூச் செடிகளை. வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது முதல்போக நெல் சாகுபடிக்காக அனைத்து செடிகளையும் உழுது விட்டார் இதில் மூன்று கஞ்சா செடிகள் மட்டும் வளர்ந்துள்ளது.
இதனை உழுது அழிக்காமல் விட்டு விட்டுள்ளார். இந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் வயலில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டு உள்ளதாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாரியப்பனை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது தான் ஒரு நிலத்தை வாங்கி உழுது வருவதாகவும் கஞ்சா செடி எப்படி வளந்தது என்று தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். இருப்பினும் வயலில் இருந்த கஞ்சா செடியை அழிக்காமல் விட்டது குற்றம் என்பதால், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.