திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் உவரி கல்விளையை சேர்ந்த அருள்தாசன் (57). தனக்கு சொந்தமான தோட்டத்தில் மோட்டார் வயரை காணவில்லை என்று உவரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இடையன்குடி, கோவில் தெருவை சேர்ந்த ராமு (21). மற்றும் ஒரு சிறுவனும் சேர்ந்து அருள்தாசன் தோட்டத்தில் இருந்து வயரை திருடி சென்றது தெரிய வந்ததையடுத்து உவரி காவல் உதவி ஆய்வாளர், சங்கர் அச்சிறுவனையும் ராமுவையும், (06.02.2025) அன்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://policenewsplus.in/wp-content/uploads/2024/08/WhatsApp-Image-2024-08-28-at-14.16.40_91441811.jpg?v=1724839859)
சண்முகநாதன்