களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்ன சங்கரன்கோவில் வாய்க்கால் பகுதிக்கு அருகே வனவிலங்கான உடும்பு ஒன்று வேட்டையாடி சமைத்தது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இவ்வனக்குற்றத்தில் ஈடுபட்ட மு. சங்கரசுப்பு, த.பெ.முருகன், அம்பாசமுத்திரம் மற்றும் க. முத்துப்பாண்டி, த. பெ. கணேசன், மேல கொட்டாரம் ஆகிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு, அம்பாசமுத்திரம் வனச்சரக வன உயிரின வனக்குற்ற எண் WLOR 3/2025 பதிவு செய்யப்பட்டு, அம்பாசமுத்திரம் நீதிமன்ற நடுவர் முன்புக்கு ஆஜர் செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
















