திருநெல்வேலி: திருநெல்வேலி நரசிங்கநல்லூர் பொன்விழா நகரைச் சேர்ந்தவர் அப்துல் வஹாப் (32). கராத்தே பயிற்சியாளரான இவர், சுத்தமல்லி, பேட்டை, கோடீஸ்வரன் நகர் பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளித்து வந்தார். இந்நிலையில் அவா், பயிற்சிக்கு வந்த ஒரு மாணவரின் தாயிடம் வன்முறையில் ஈடுபட்டு தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அப் பெண் அளித்த புகாரின்பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி காவல்துறையினர் வழக்குப்பதிந்து அப்துல் வஹாப்பை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்