திண்டுக்கல்: திண்டுக்கல் தவசிமடை பகுதியில் ஒரு கும்பல் துப்பாக்கியுடன் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலை அடுத்து சிறுமலை வன அலுவலர் மதிவாணன் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது கள்ள துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் தவசிமடை பகுதியை சேர்ந்த ஜெயமணி (எ) முருகன்(31). வீரசின்னம்பட்டியை சேர்ந்த ராஜாராம்(33). என்றும் அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் குரங்கை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து வனத்துறையினர் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த கள்ளத்துப்பாக்கியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா