திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகம், கோயில்பட்டி கிராமப்பகுதியில் கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் மற்றும் வனவர் அய்யனார் செல்வம் மற்றும் வனப் பணியாளர்கள் ரோந்து பணி மேற்கொண்ட பொழுது முயல் பிடிக்கும் வலை மற்றும் குச்சியினை கொண்டு முயல் மற்றும் காடை போன்ற வன உயிரினங்களை வேட்டையாடிய
வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி பகுதியைச் சேர்ந்த இருதயராஜ், சேசு.அமுதன்,சேவியர் ராஜ், உட்பட நான்கு நபர்களைப் பிடித்து வளத்துறை விசாரணை நடத்தி மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி தலா ரூ.12,500/- வீதம் மொத்தம் ரூ 50,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா