திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு கன்னிமார் கோயில்தெருவை சேர்ந்தவர் முத்தையா (52) இவர் தனது உறவினர் வீட்டில் காளான் பண்ணை வைத்து தொழில் செய்துவந்தார். திடீரென பண்ணையில் தீப்பிடித்து வளர்ப்பு காளான்கள் அனைத்தும் கருகின. மேலும் தீ மாடியில் இருந்த பிளாஸ்டிக் ஷீட்டினால் கட்டப்பட்ட அறைக்கும் பரவி முழுவதும் சேதமடைந்தது. வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றனர். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா