திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பைபாஸ் பகுதியில் ராஜ்குமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது, தேனி மாவட்டம் அய்யனார்புரத்தைச் சேர்ந்த கோபிநாத் (36) என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,88,700 பணம் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான்சிக்கந்தர் மற்றும் துணை தாசில்தார் பிரேம்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















