திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கட்டக்காமன்பட்டி மாவட்ட எல்லையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். மாநில துணை வரி அலுவலர் உமாதேவி தலைமையில் நடைபெற்ற சோதனையின் போது, தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நோக்கி சென்ற மினி வேன் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது.
அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,90,000 ரொக்கப் பணம் கண்டறியப்பட்டதால், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர் பாலகுருநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் பிளாஸ்டிக் பைப்களை ஏற்றி சென்ற பின்னர் பெற்ற பணத்தை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















