கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் துறிஞ்சிப்பட்டி, மாதேபட்டி ஆத்துப்பாலம் மற்றும் செம்படமுத்தூர் ஆகிய மூன்று கிராமங்களில் வட மாநில தொழிலாளர்கள் குழந்தைகள் கடத்த வந்ததாக கருதி (06.03.2024) ஆம் தேதி மதியம் வட மாநில தொழிலாளர்களை தாக்கி காயமடைந்த நபர்களை கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து விட்டு வந்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையம் ஆஜராகி கிராம நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்த போலீசார் வட மாநில தொழிலாளர்களை தாக்கிய 8 நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.