திண்டுக்கல் : திண்டுக்கல் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இளங்கோ தலைமையிலான வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திண்டுக்கல் பழனி ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஓன் போர்டு வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தியதாக 2 வாகனங்கள், தகுதி சான்று இல்லாமல் கூடுதலாக பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற 1 வாகனம் என 3 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா