தேனி: கம்பம் மெட்டு வழியாக கேரளாவிற்கு ஏலத்தோட்ட வேலைக்கு சென்ற வடமாநிலத்தைச் சேர்ந்த 50 குடும்பத்தினர் உரிய சான்றிதழ் (இ-பாஸ், கொரோனா பரிசோதனை சான்றிதழ்) இல்லாமல் காத்திருந்த நிலையில் அங்கு விரைந்து வந்த கம்பம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.K.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல் நிலைய காவல்துறையினர் அங்கு காத்துக்கொண்டிருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் பசி தீர்க்க பிஸ்கட், தண்ணீர்,உணவு, அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கினர்.
தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகள் வழங்கிய தேனி மாவட்ட காவல் துறையினருக்கு வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.