திண்டுக்கல் : திண்டுக்கல், வடமதுரை அருகே கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் மனமகிழ் மன்றத்தில், ரெட்டியபட்டியை சேர்ந்த பாண்டி (46), பெரும்புள்ளியை சேர்ந்த பிரபாகரன் (34), ஏ.வி.பட்டியை சேர்ந்த சக்திவேல் (36), செங்குளத்துப்பட்டியை சேர்ந்த பாலமுருகன் (30), அய்யலூரை சேர்ந்த சின்னாத்தேவர் (60), வடமதுரையை சேர்ந்த சித்திரைவேல் (32) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 100 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா