மதுரை: மதுரையில் வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஐயர் பங்களா ஸ்ரீநகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் கொண்டல் ராஜன் மகன் செந்தில் கண்ணன் 41. இவர் எச்டிஎப்சி வங்கி மேலாளராக பணியாற்றி வந்தார். சில தினங்களாக இவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை குறித்து அப்பா, கொண்டல் ராஜன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் , வங்கியில் கடந்த ஒரு வாரமாக பணியில் ஏதோ பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி