சென்னை : கடந்த 12.02.2023 அன்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ATM மையங்களிலிருந்து பணம் திருடப்பட்டது தொடர்பாக அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் திரு.செ. சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இதில் 51 பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். அதில் வங்கி மற்றும் ATM- மையங்களில் உள்ள பணத்தை கண்காணிக்க மறைமுக கேமிராக்கள் நிறுவப்பட வேண்டும் என்றும், முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமிராக்கள் அனைத்து ஏடிஎம்-களிலும் பொருத்தப்பட வேண்டும் என்றும், ஏடிஎம்-கள் உடைக்கப்படும் போது எச்சரிக்கை மணி அங்கே ஒலிக்கவும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒலிக்க வழிவகை செய்ய வேண்டுமென்பது போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர்.