திருநெல்வேலி: 98 இலட்சம் மதிப்பிலான 14 புதிய டிராக்டர்களுக்கு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் லோன் பெற்று தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது இரண்டு டிராக்டர்கள் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சுரேஷ் 34, என்பவர், திருநெல்வேலி மாவட்டம்
IRT கல்லூரி எதிரே ஸ்ரீஉமையாள், என்ற பெயரில் புதிய டிராக்டர்களை விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வந்தார். இதில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊர்காட்டை சேர்ந்த ஐயப்பன் 40, என்பவர் மேலாளராக பணி செய்து வந்தார்.
மேற்படி நபர் 1 வருடத்திற்கு முன் நிறுவனத்தில் டிராக்டர்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு, தனியார் பைனான்ஸ் மூலம் முன்பணம் செலுத்தாமல் கடன் பெற்று தருவதாக கூறி 14 டிராக்டர்களை விற்பனை செய்து பின் ஐயப்பன் தனது கூட்டாளிகள் 6 பேருடன் 14 டிராக்டர் உரிமையாளர்களை நேரில் சந்தித்து டிராக்டர் நன்றாக இருக்கிறதா என களஆய்வு செய்வது போல், நாடகமாடி டிராக்டரை எடுத்து மோசடி செய்து விற்பனை செய்துள்ளனர்.
மேற்படி தகவல் தெரிந்த ஏஜென்ஸி உரிமையாளரான சுரேஷ், மேலாளர் ஐயப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். மேற்படி மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,மாவட்ட குற்றப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ் குமார், அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி. ரமா அவர்கள் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஐயப்பனை கைது செய்து தூத்துக்குடி,மதுரை, திருவள்ளூர், மதுராந்தகம், தஞ்சாவூர், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் டிராக்டர்களை விற்பனை செய்ய உடந்தையாக இருந்த மேலகல்லூரை, சேர்ந்த சுப்பிரமணியன், தூத்துக்குடி பசுவந்தனையை சேர்ந்த பாபு என்ற கணபதிராம், கோபாலசமுத்திரத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற முருகன், ஆகியோரை கைது செய்து 7 டிராக்டர்களை பறிமுதல் செய்திருந்தனர். தற்போது சீதபற்பநல்லூரை சேர்ந்த பரமசிவன் 34. என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்து மொத்தம் ரூபாய் 63 இலட்சம் மதிப்புள்ள 9 டிராக்டர்களை பறிமுதல் செய்த மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரமா, தலைமையிலான காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், இ.கா.ப அவர்கள், வெகுவாக பாராட்டினார்.