விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்த இராஜேஸ்வரன் என்பவர் நேற்று முன்தினம் (செப்.16) பணிக்கு சென்ற போது லாரி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக அவரது மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் லாரி டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் காமாட்சி நகரை சேர்ந்த வெள்ளையன் மகன் செந்தில்வேலன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த நரிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.முனியாண்டி