திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தாளையம் பைபாஸ் அருகே இருசக்கர வாகனம் மீது ஈச்சர் லாரி மோதி விபத்து. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த கோதைமங்கலத்தை சேர்ந்த மாரிமுத்து என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாமிநாதபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முரளி மற்றும் போலீசார் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஈச்சர் லாரி டிரைவர் பாண்டித்துரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா