மதுரை: நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி மோதியதில் ஒருவர் படுகாயம் மற்றொருவர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை கே .எம். ஆர். கல்யாண மஹால் பாலம் இறக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை நடுவே மரகன்று பராமரிக்கும் தனியார் நிறுவனம் திண்டுக்கல் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் செடிகள் பராமரிப்பு செய்து கொண்டிருந்தது.
நாகமலை புதுக்கோட்டை அருகே நின்று கொண்டு இருந்த வாகனம் மீது புத்தம் புதிய லாரி அதிவேகமாக மோதி சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக ஓட்டுனர் சிக்கித் தவிப்பு. பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்கு பின் தேசிய பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர்நெடுஞ்சாலைத்துறை ஜேசிபி மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து படுகாயத்துடன் மீட்டனர்.மேலும் , தனியார் தேசிய நெடுஞ்சாலை துறை பராமரிப்பு தொழிலாளி கார்த்திகேயன் (வயது 39). ஒருவரும் படுகாயம் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
















