மதுரை: மதுரை தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கனி ராஜா ( வயது 31). இவருக்கு, திருமணம் ஆகி மனைவி திவ்யா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கனிராஜா ( டாட்டா ஏஸ் ) சரக்கு வாகன ஓட்டுனராக உள்ளார். தனக்கன் குளத்தில் இருந்து, திருப்பரங்குன்றம் நோக்கி செல்லும்போது, திருமங்கலத்தில் இருந்து வந்த லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே கணிராஜா பலியானார். விபத்துக்
குறித்து, திருப்பரங்குன்றம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருன்றனர். சம்பவ இடத்தில் பலியான கனி ராஜாவின், உடலை உடற்கூறு பரி
சோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி