திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ரவிக்குமார் கடந்த 1991 96 காலகட்டத்தில் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்தவர். இவரது மனைவி நிர்மலா இவர் அதே காலகட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியில் தமது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இன்று காலை மகளை கல்லூரியில் விடுவதற்காக முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார் தமது மனைவியுடன் மகளை அழைத்துக் கொண்டு கல்லூரியில் விட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டு இருந்தார். மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மீஞ்சூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ரவிக்குமார் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். அவரது மனைவி நிர்மலாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு