திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவு அருகே வந்து கொண்டிருந்த கார், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதி உருக்குலைந்தது. இந்த விபத்தில், காரில் வந்த சேலத்தை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் வந்த கார்த்திக் (40), சங்கர் (29), மற்றொரு கார்த்திக் (31), முருகேசன் (30), கார் டிரைவர் மகேந்திரன் (39), ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ,திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி