தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கோவில்லூரை சேர்ந்த கந்தசாமி இவர் சில தினங்களுக்கு முன்பு 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கர்நாடக பதிவெண்கொண்ட லாரியை வாங்கி உள்ளார். தருமபுரி பதிவு எண்ணில் மாற்ற லாரியை கந்தசாமி தருமபுரி ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே நிறுத்தி உள்ளார். லாரி காணாமல் போனதை அடுத்து மனுதாரரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து லாரி திருடி சென்ற தருமபுரியை சேர்ந்த காளியப்பன், சிவப்பிரகாசம், ஆயுப்பாஷா ஆகியோரை தருமபுரி டவுன் காவல் நிலைய போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.